Drop down menu

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Thursday 26 December 2013

மெமரிகார்டில் இழந்த தகவல்களை திரும்ப பெற உதவும் இலவச மென்பொருள் (SD CARD DATA RECOVERY SOFTWARE FREE DOWNLOAD)





                நாம் விரும்பும் புகைப்படங்கள், பாடல்கள், வீடியோக்கள் மற்றும் அவசியமான டாகுமெண்டுகள் போன்றவற்றை மெமரிகார்டு, பென்ட்ரைவ், கணினியின் வன்வட்டு (HARD DISK) போன்றவற்றில் சேமித்து வைத்திருப்போம். சில நேரங்களில் தவறுதலாக நாம் அவற்றை அழித்து விட்டு வருத்தப்படுவோம். இனி கவலைப்பட தேவையில்லை.


              இதற்காகவே பல DATA RECOVERY SOFTWARE கள் தற்போது இணையம் மூலமாக இலவசமாகவும், பணம் செலுத்தி பெறும் வகையிலும் கிடைக்கின்றன. அவற்றில் ஒரு சிறந்த மென்பொருளைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முதலில் இந்த மென்பொருளுக்கான அவசியத்தை முதலில் அறிவது நல்லது. நமது சேமிப்பு சாதனங்களான வன்வட்டு, மெமரி கார்டு, பென் ட்ரைவ் போன்றவற்றில் உள்ள தகவல்கள்,

  • நாம் தவறுதலாக அழிப்பது.
  • VIRUS தாக்குதலால் அழிவது.
  • தவறுதலாக FORMAT  செய்வது.

இவை போன்ற காரணங்களால் அழிகின்றது.

            இழந்த தகவல்களை நாம் திரும்ப பெற முக்கியமாக செய்ய வேண்டியது நாம் அதன் மீது தகவல்களை பதிவு செய்ய கூடாது. அவ்வாறு பதிந்தால் இழந்த தகவல்கள் இருந்த பகுதியை புதிதாக நாம் பதியும் தகவல்கள் ஆக்கிரமித்து கொள்ளும். அதனால் நம்மால் நாம் விரும்பிய பாடல்கள், புகைப்படங்கள் போன்ற தகவல்களை திரும்ப பெற முடியாமல் போகலாம்.

          இன்று நாம் பார்க்கப்போகும் SOFTWARE ன் பெயர் I CARE DATA RECOVERY என்பதாகும். இது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதன் மூலமாக 2GB அளவிலான தகவல்களை இலவசமாக திரும்ப பெற முடியும். அதன் பிறகு உங்களுக்கு இந்த மென்பொருளின் செயல்பாடுகள் பிடித்திருந்தால் பணம் செலுத்தி அளவின்றி பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதன் சிறப்புகளின் சில:


  • WINDOWS NT, WINDOWS 2000, WIN 2003, WINDOWS 2008, WINDOWS XP, WINDOWS VISTA, WINDOWS 7 போன்ற OPERATING SYSTEM களில் இயங்கவல்லது.
  • அனைத்து விதமான HARD DISK, EXTERNAL DISK, FLASH DISK, USB DISK , MEMORY CARD(SD,FLASH,XD, etc..) களில் இருந்தும் இழந்த தகவல்களை திரும்ப பெறமுடியும்...
  • இதன் மூலம் இழந்த PARTITION களை திரும்ப பெற முடியும்..

I CARE DATA RECOVERY SOFTWARE  யை இலவசமாக DOWNLOAD செய்ய இதன் மேல் CLICK செய்யவும்.

I CARE DATA RECOVERY மென்பொருளை INSTALL  செய்யும் வழிமுறைகள்:


  • முதலில்  DOWNLOAD செய்த SETUP  FILE  ன் மீது சுட்டியை வைத்து RIGHT CLICK செய்து RUN AS ADMINISTRATOR என்பதை இயக்கவும்.
  • பின்னர் கிடைக்கும் WINDOW களில் படத்தில் காட்டப் பட்டுள்ளது போல் பின்பற்றவும்.











அவ்வளவு தான் மென்பொருள் INSTALL செய்து விட்டீர்கள்.

குறிப்பு: நீங்கள் தேடும் FILE கிடைக்கவில்லை என்றால் RAW FILE என்பதில் சென்று தேடுங்கள்..

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா என்பதை பின்னூட்டம் மூலமாக தெரிவிங்கள் நண்பர்களே.... பதிவினை படித்த நண்பர்களுக்கு எனது நன்றிகள்...



No comments :

Post a Comment