Drop down menu

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Friday 11 October 2013

எந்தவொரு வீடியோவையும் வேறு FORMAT-ற்கு CONVERT செய்ய உதவும் இலவச மென்பொருள்

  



   மொபைல் போன்களில் சில வீடியோக்களை நாம் பார்க்க முயலும் போது VIDEO NOT SUPPORTED  என்று வருவதை பார்த்திருப்போம். இதற்கு காரணம் நாம் இயக்கும் VIDEO-வின் FORMAT ஆனது நமது மொபைல் போனில் இயக்கும் வகையில் இல்லை என்பதே ஆகும். அந்த வீடியோவினை  மொபைலில் பார்க்க வேண்டுமெனில் VIDEO FORMAT  யை நமது மொபைல் SUPPORT  செய்யும் FORMAT-க்கு  மாற்ற வேண்டும்.
இதற்கென இணையத்தில் இலவசமாகவும் பணம் செலுத்தும் வகையிலும் பல VIDEO CONVERTER மென்பொருள்கள் கிடைக்கின்றன.
  
    அவற்றில் மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். அந்த மென்பொருளின் பெயர் ANY VIDEO CONVERTER என்பதாகும். பெயருக்கு ஏற்றாற்போல் எந்தவொரு வீடியோவையும் நாம் விரும்பும் FORMAT-க்கு இந்த மென்பொருளின் மூலம் மாற்ற முடியும். மேலும் நாம் எந்த வகையான DEVICE- களை வைத்திருக்கிறோமோ அதற்கு ஏற்ற VIDEO FORMAT க்கு மாற்ற முடியும். இதில் மொபைல் போன் மட்டும் இன்றி பல சாதனங்களுக்கு வீடியோக்களை மாற்றிக்கொள்ள முடியும்.

   ANY  VIDEO CONVERTER மென்பொருளின் மற்றும் ஒரு சிறப்பு இது ஒரு சிறந்த VIDEO EDITOR ஆகவும் செயல்படுகிறது. இதன் மூலம் ஒரு வீடியோவில் நமக்கு தேவைப்படும் ஒரு குறிப்பிட்ட பகுதியைனை மட்டும் தனியாக CUT செய்து SAVE  செய்வதன் வாயிலாக பெறமுடியும். மேலும் வீடியோவின் EFFECT  மாற்றுவது BRIGHTNESS, SATURATION, CONTRAST  போன்றவற்றையும் நம் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். இதிலேயே PREVIEW  வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளதால் நாம் செய்த மாற்றங்களை இதிலேயே கண்டு, மேலும் தேவைப்படும் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

இது வீடியோவினை நமக்கு தேவையான ஆடியோவாக மாற்றிக்கொள்ளலாம். இது அனைத்து விதமான விண்டோஸ் ஆபரேட்டிங்க் சிஸ்டங்களிலும் இயங்குகிறது. இது 33 MB என்ற அளவில் கிடைக்கிறது.

இது இந்த மென்பொருளினை எவ்வாறு இலவசமாக DOWNLOAD செய்து நமது கணினியில் INSTALL  செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

                                                                                    
INSTALL  செய்யும் வழிமுறை:

Ø  DOWNLOAD  செய்த SETUP FILE-யை DOUBLE CLICK செய்து இயக்கவும்.
Ø  அடுத்து வரும் WINDOW-வில் உங்களுக்கு தேவையான மொழியினை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
Ø  அடுத்து வரும் WINDOW-வில் NEXT என்பதை க்ளிக் செய்யவும்.
Ø  LICENSE AGREEMENT-யை படித்துவிட்டு (பொறுமை இருந்தால்) ACCEPT என்பதில் TICK செய்து NEXT க்ளிக் செய்யவும்.
Ø  பிறகு NEXT-யை மூன்று முறை க்ளிக் செய்துவிட்டு அடுத்து INSTALL என்பதை க்ளிக் செய்யவும்.
Ø  பிறகு FINISH-யை க்ளிக் செய்யவும்.
Ø  அவ்வளவு தான் நீங்கள் ANY VIDEO CONVERTER-யை வெற்றிகரமாக INSTALL செய்து விட்டீர்கள். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படங்களை பார்க்கவும்.















இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் வாயிலாக தெரிவியுங்கள் நண்பர்களே. மேலும் சந்தேகங்களுக்கு tamiloduvilaiyadu@gmail.com  என்ற  மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் நண்பர்களே.....


தளத்திற்கு வந்து பதிவினை படித்தமைக்கு மிக்க நன்றி நண்பர்களே.................



No comments :

Post a Comment