Drop down menu

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Tuesday 31 December 2013

ஜாவா மொபைல் விளையாட்டுகளை நமது கணினியில் விளையாடுவது எப்படி?



                      நண்பர்கள் அனைவருமே மொபைல் கேம்களை விளையாடி இருப்பீர்கள். அவற்றில் உள்ள சுவாரசியமும், விறுவிறுப்பும், அதிரடியும், இவ்விதமான மொபைல் விளையாட்டுகளை அடிக்கடி நம்மை விளையாடத்தூண்டும். இப்போது Android, ios, என பல விதமான Platform களில் மொபைல் போன்களுக்கான  விளையாட்டுகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருந்தாலும், ஜாவா அடிப்படையிலான விளையாட்டுகள் பலராலும் இன்றும் விரும்பி விளையாடப்படுகின்றன.



                       ஜாவா மொபைல் விளையாட்டுகளை கணினியில் விளையாட முடியுமா என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?. அப்படி விளையாட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.  இதற்கு சில வழிகளை பின்பற்றுவதன் மூலம் இதை சாத்தியாமாக்கலாம். இனி எப்படி ஜாவா  மொபைல் விளையாட்டுகளை நமது கணினியில் விளையாடுவது என்பதை பற்றி பார்ப்போம்.

Step 1: 

  • Java JRE ( Java Runtime Environment) Program-யினை உங்களது கணினியில் Install  செய்து இருக்க வேண்டும்.
  • நீங்கள் இதுவரை Java JRE  யினை Install செய்திருக்கவில்லை எனில் முதலில் இதை உங்களது கணினியில் Install செய்து கொள்ளுங்கள்.


Java JRE யினை இலவசமாக Download செய்ய இதன் மேல் Click  செய்யவும்.

Step 2:
                   ஜாவா அடிப்படையிலான அனைத்து விளையாட்டுகளையும் கணினியில் விளையாடும் வகையில் ஒரு  மென்பொருள் உள்ளது. இது இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. இதன் பெயர் KEmulator என்பதாகும். இதன் மூலம் தொடுதிரை(touch), விசை(keybad) என ஜாவா அடிப்படையில் உருவாக்கப்பட்ட அனைத்து விளையாட்டுகளையும் உங்களது கணினியில் விளையாட முடியும்.

KEmulator மென்பொருளை இலவசமாக Download செய்ய இதன்மேல் Click செய்யவும்.



  • Download செய்த KEmulator மென்பொருளை  உங்கள் கணினியில் Install செய்து கொள்ளுங்கள்.
  • பிறகு உங்களுக்கு பிடித்த ஜாவா கேம் களை Download செய்து உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.

ஜாவா கேம் Download செய்ய இதன் மேல் Click செய்யவும். 
  • KEmulator மென்பொருளை இயக்கி, வரும் Window வில் Midlet---->Loadjar. என்பதில் சென்று நீங்கள் விளையாட விரும்பும் java game யினை இயக்குங்கள்.

  • அவ்வளவுதான் இனி நீங்கள் விரும்பிய மொபைல் ஜாவா கேம் களை உங்களின் கணினியில் விளையாடி மகிழுங்கள்.
  • keybad மூலம் விளையாடும் ஆர்வமுள்ளவர்கள் view---->keybad யினை இயக்கும் போது உங்களுக்கு ஒரு விசைப்பலகை கிடைக்கும்.


     நன்றி  

No comments :

Post a Comment