Drop down menu

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Wednesday 9 October 2013

எளிமையாக தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இலவச அழகி மென்பொருள்







தமிழில் பல மாதம் தட்டச்சு பயிற்ச்சி பெற்றவரால் மட்டுமே தமிழில் விரைவாக தட்டச்சு செய்ய முடியும், என நினைப்பவரா நீங்கள்? தமிழில் விரைவாக தட்டச்சு(TYPE) செய்ய ஆசைப்பட்டு, பலமுறை தோற்றுப்போனவரா? தமிழில் தட்டச்சு செய்வது உங்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறதா?. தமிழில் தட்டச்சு செய்வது மிகவும் எளிதாக இருந்தால் எப்படி இருக்கும் என பல முறை எண்ணியவரா?.

இனி கவலையை விடுங்கள், உங்களுக்காகவே அழகி என்னும் இலவச மென்பொருள் உள்ளது. நீங்கள் மொபைலில் உங்கள் நண்பருக்கு தங்க்லிஸ்ல்(TANGLISH)  தட்டச்சு செய்து குறுஞ்செய்தி அனுப்பி பயிற்ச்சி பெற்றவராக இருந்தால் இந்த மென்பொருள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளது மட்டுமல்லாமல் நீங்கள் இதனை பயன்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கும்.

ஏற்கனவே GOOGLE TRANSLATER போன்ற மென்பொருள்கள் இருந்தாலும் அவை நமது பொருமையை சோதிக்கவே செய்யும் நாம் ஒன்றை நினைத்து TYPE செய்தால் அது ஒன்றை காண்பிக்கும்.

அழகி மென்பொருளின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் இது PHONETIC TRANSLITERATION  எனப்படும் ஒலிஉருமாற்று முறையில் இயங்குவதாகும். இதனால் நீங்கள் பேசும் எந்தவொரு தமிழ் வார்த்தையையும் நீங்கள் பேசுவது போலவே தங்க்லிஷ்ல் தட்டச்சு செய்து தூய்மையான தமிழ் வார்த்தையினை பெறலாம். 

இது பெரும்பாலான விண்டோஸ் இயங்குதளங்களில் இயங்ககூடியது. 2.888MB என்ற மிக சிறிய அளவில் கிடைக்கிறது.

இதன் மூலம் தமிழ் மட்டும் அல்லாமல் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க பயன்படுகிறது. இது MS OFFICE, GMAIL, FACEBOOK, BLOGS, மற்றும் பல வற்றில் இயங்ககூடியது. இனி இதனை எப்படி நம்முடைய கணிணியில் தரவிறக்கி பயன்படுத்துவது என்பதைப் பற்றி பார்ப்போம்.

அழகி மென்பொருள் கிடைக்கும் தளத்திற்கு சென்றவுடன் அங்கு இரண்டு வகையான NORMAL மற்றும் PORTABLE என அழகி மென்பொருள் கிடைக்கும். இதில் PORTABLE என்பதை நீங்கள் எங்த கண்ணியில் வேண்டுமானலும் உங்கள் PENDRIVEல் காப்பி செய்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். இதனை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவத்தேவை இல்லை.

AZHAGI+ யை எவ்வாறு நிறுவுவது என்பது பற்றி பார்ப்போம்

இது ZIP  பைல் ஆக கிடைக்கிறது.
1. முதலில் இதனை தரவிறக்கி கொள்ளுங்கள்.
2. இது ZIP FILEஎன்பதால் WINZIPRAR அல்லது 7ZIP மென்பொருளைக்கொண்டு விரித்துக்கொள்ளுங்கள்.பிறகு அதனுள் இருக்கும் EXE FILEயை காப்பி செய்து வேறு ஒரு போல்டரில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
3. பேஸ்ட் செய்யப்பட்ட EXE  பைலை DOUBLE CLICK செய்து இயக்கவும்.


4. அடுத்து வரும் WINDOW களில் NEXT என்பதை 4 முறை க்ளிக் செய்து விட்டு பிறகு INSTALL என்பதை கிளிக் செய்யவும். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.



5. இறுதியில் வரும் WINDOW வில்  FINISH  என்பதை க்ளிக் செய்யுங்கள்.
6. உங்களது அழகி மென்பொருள் வெற்றிகரமாக நிறுவப்பட்டு விட்டது.

     இனி அழகியை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்

1. முதலில் அழகி மென்பொருளின் SHORTCUT இனை DOUBLE CLICK செய்து இயக்குங்கள். கீழே உள்ளது போல் ஒரு WINDOW OPEN ஆகும்.


2. பிறகு அதனை MINIMIZE செய்து கொள்ளவும், பிறகு நீங்கள் தட்டச்சு செய்ய விரும்பும் இணைய பக்கத்தையோ அல்லது MS OFFICE  போன்ற
மென்பொருளையோ இயக்கவும், பிறகு தமிழில் தட்டச்சு செய்ய F10 KEY யினை அழுத்தவும்.

4. இப்போது உங்கள் LANGUAGE BAR ல் TA  என்ற எழுத்துக்கள் வரும்.


5. பிறகு நீங்கள் விரும்பும் தமிழ் வார்த்தையை தங்க்லிஸில் தட்டச்சு செய்யவும்.



6. ஆச்சர்யத்தை பார்த்தீர்களா! நீங்கள் தட்டச்சு செய்யும் அனைத்தும் தூய தமிழில் பதிவாவதை பார்ப்பீர்கள்.
7. பிறகு மீண்டும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய F10 KEY யை மீண்டும் அழுத்தவும்.
8. ற,ர மற்றும் ள்,ல் மற்றும் ண்,ன் போன்ற எழுத்துக்களை மாற்ற SHIFT+R, SHIFT+L, மற்றும் SHIFT+N போன்ற KEY யை பயன்படுத்துங்கள்.


அழகி எனும் ஒப்பற்ற மென்பொருளை வடிவமைத்து அதனை பணம் செய்யும் இயந்திரமாக பயன்படுத்தாமல் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இலவசமாக வழங்கிய, பா.விஸ்வநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

நன்றி

22 comments :

  1. தெரிந்த தகவலைத் தந்திருந்தாலும், விரும்பி வாசித்தேன். இப்பதிவு குறித்த தகவல் தெரியாதவர்களுக்கு, இப்பதிவு மிக நன்மை தரும்.

    (தங்களின் உதாரணத்தில், சிறிய தவறுகள் இருக்கின்றன.

    THAMIZOADU VI(l)AIYAADU (ZO'க்குப் பிறகு "A" மற்றும் அடைப்புக்குள் SMALL "L")

    தமிழோடு விளையாடு

    இதுதானே சரியாக இருக்கும்?) :-)

    ReplyDelete
    Replies
    1. தவறினை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே... தற்போது தவறை திருத்திவிட்டேன். தளத்திற்கு வந்தது மட்டுமல்லாமல் தவறை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்தியமைக்கு மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றி நண்பரே... உங்கள் ஆதரவையும்,கருத்துகளையும் எதிர்பார்க்கும் உங்கள் நண்பன்.

      Delete
  2. அற்புதம் சங்கர்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும், கருத்தினை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி நண்பரே........ அடிக்கடி இங்கு வருமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்...

      Delete
  3. thamizai mika eLiya muRaiyil thattassu seyya uthavum Azhagi+ kku nanRi.
    Che.Natesan

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் ஐயா.

      Delete
  4. மிகவும் நன்றி நன்பா ..
    என் ஒரு மாத தேடலின் விடை இங்கு கண்டேன்
    உங்களுக்கு நன்பர் பா.விஸ்வநாதன் அவர்களுக்கும் மிக்க நன்றி....

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு உதவ முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பா...தங்களது வருகைக்கும் கருத்தினை பதிவு செய்தமைக்கும் மிக்க நன்றிகள் நண்பா.....

      Delete
  5. இது போன்ற பயனுள்ள தளங்களை காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி.....
    தங்கள் முயற்சிகளில் எங்கள் பங்களிப்பு இருக்க .ஆசை....
    இனணய முகவரி: manivannanhappy@gmail.com

    ReplyDelete
    Replies
    1. உங்களை போன்ற நல்ல நண்பர்களின் துணை இருந்தால் இன்னும் பலருக்கு உதவ காத்திருக்கிறேன் நண்பா.... வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பா.

      Delete
  6. மிக்க நன்றி தலைவா நான் நெடு நாட்களாக இதை தான் தேடி கொண்டிருந்தேன்

    ReplyDelete
  7. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தலைவா....!

    ReplyDelete
  8. Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா....

      Delete
  9. உள்ளம் பூரிக்கிறது நண்பா, தமிழ் இனி நனறாக வாழும். இது சத்தியம். வாழ்க தமிழ். பா.விஸ்வநாதன் மற்றும் சங்கரபாண்டியனுக்கு வாழ்த்துக்கள். இதை அழகியிளேயெ தட்டச்சு செய்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் உணர்ந்த இதே உள்ள பூரிப்பை, முதன் முதலில் அழகியை பயன்படுத்துகையில் நானும் உணர்ந்தேன் தோழா... அப்போதே இது தமிழுக்கும், தமிழனுக்குமான வரம் என்பதை உணர்ந்தேன். இந்த ஒப்பற்ற அழகியை படைத்த பா.விஸ்வநாதன் அவர்களுக்கே இந்த பாராட்டுகள் அனைத்தும் சேரும் தோழா. இந்த அரியவளை என்னால் முயன்ற அளவு மற்ற சகோதர, சகோதரிகளிடம் சேர்க்கும் சிறிய பணி மட்டுமே என்னுடையது நண்பா. தங்களின் வருகையாலும், கருத்தினாலும், நீங்கள் அழகியின் அழகை உணர்ந்து கொண்டதாலும் பெருமகிழ்ச்சி அடைகிறேன் நண்பா. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  10. ணீங்கள் சொன்ன படி அதை நிருவி விட்டென். ஆனாலும் வொர்ட் 7 ல் எப்படி ட்ய்ப் செய்வது

    ReplyDelete
    Replies
    1. தாமதத்திற்கு மன்னிக்கவும் நண்பா...

      நீங்கள் windows vista/7 உபயோகிப்பவராக இருந்தால்... கீழே உள்ள லிங்கில் சென்று உங்களுக்கான பதிலை பெறலாம் நண்பா...

      https://groups.google.com/forum/#!topic/azhagi/nXLZhMNb9sY

      இதில் கூறியுள்ளபடி முயற்சி செய்யுங்கள் நண்பா..
      வருகைக்கு நன்றி....

      Delete
  11. I am not getting it right as an initiating letter.
    How to get the appropriate Na iin Tamil in a line which begins with Nee?

    ReplyDelete
    Replies
    1. தாமதத்திற்கு மன்னிக்கவும் நண்பா....

      நீங்கள் என்பதை சாதாரணமாக தட்டச்சு செய்தால் னீங்கள் என்று தான் வரும்... அதற்கு பதிலாக N என்ற எழுத்திற்கு பிறகு H யை டைப் செய்யுங்கள் இப்போது உங்களுக்கு ந் என்ற எழுத்து கிடைக்கும் தொடர்ந்து A என்ற எழுத்தை டைப் செய்து ந வையும் அடுத்து ஒரு A யை டைப் செய்து நா வையும் பெறலாம். நீ என்னும் எழுத்திற்கும் இதே முறையில் N H II என்று டைப் செய்து பெறலாம்.

      இது தங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்...

      தங்கள் வருகைக்கு நன்றி நண்பா...

      Delete
  12. Replies
    1. தாமத்திற்கு மன்னிக்கவும் நண்பரே...

      அழகியை விண்டோஸ் 8.1 இயங்குதளத்திலும் எளிதாக பயன்படுத்தலாம் நண்பா... தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete