Drop down menu

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Friday 11 October 2013

உங்களுடைய கணினி பற்றிய அனைத்து விபரங்களையும் அறிய உதவும் இலவச மென்பொருள்




நமது கணினியில் பல்வேறு மென்பொருள் வைத்திருப்போம். அவை ஒவ்வொன்றும் ஒரு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு இருக்கும். எத்தனை மென்பொருள்கள் இருந்தாலும் நமது கணினியை பற்றிய விபரங்களை அளிக்கும் மென்பொருள்கள் இருக்காது.

நம் கணினியில் உள்ள software , hardware, operating system, processors போன்றவைகளை பற்றி தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். இது போன்ற அனைத்து விபரங்களையும் தெரிவிக்கும் இலவச மென்பொருள் ஒன்று உள்ளது. அதன் பெயர்
 BELRAC ADVISOR  என்பதாகும்.

இணையத்தில் இதுபோன்ற பல மென்பொருள்கள் இருந்தாலும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில் இதில் உங்கள் கணினி குறித்த விபரங்கள் மட்டும் அல்லாது உங்கள் கணினியின் தற்போதைய பாதுகாப்புநிலை, நீங்கள் தவறவிட்ட security update போன்றவற்றையும் தெரிவிக்கிறது.

இதன் மிகப்பெரிய சிறப்பு நீங்கள் தவறவிட்ட அல்லது மறந்து போன LICENSE KEY களை REGISTRY  யில் இருந்து அளிக்கிறது. இதன் மூலம் WINDOWS, MS OFFICE உட்பட நமது கணினியில் INSTALL செய்யப்பட்ட பல மென்பொருள்களின் LICENSE KEY களை அறியமுடியும்.

நாம் தவறவிட்ட பாதுகாப்பு நிரல்களை இதன் மூலமாக நேரடியாக இணையத்தில் சென்று நாம் தரவிறக்கிக் கொள்ளலாம். இது அனைத்து விண்டோஸ் இயக்க முறைகளிலும் இயங்குகிறது. மேலும் இது IE, FIREFOX, CHROME,etc…. உலவிகளில் இயங்கும். எனவே இதில் ஏதாவது ஒரு உலவியினை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவி இருந்தால் போதுமானதாகும்.

இந்த மென்பொருளை எவ்வாறு தரவிறக்குவது, மற்றும் நிறுவுவது என்பதை கீழே பார்ப்போம்.


1.      BELRAC ADVISOR தளத்திற்கு சென்றவுடன் கீழே படத்தில் காட்டப்பட்டு உள்ளது போன்று க்ளிக் செய்து இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.



2.      பின்பு தரவிறக்கிய மென்பொருளை DOUBLE CLICK செய்து இயக்கவும். உங்களுக்கு கீழே படத்தில் காட்டப்பட்டு உள்ளது போன்று ஒரு WINDOW OPEN ஆகும். இதில் I AGREE என்பதை க்ளிக் செய்யவும்.

 


3.      அடுத்ததாக வரும் WINDOW வில் INSTALL  என்பதை க்ளிக் செய்யுங்கள்.

 



4.    அடுத்து வரும் MESSAGE BOX ல் CHECK BOX யை CLICK செய்து பின்பு  YES என்பதை க்ளிக் செய்யவும். மேலும் விபரத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

 

.      இப்பொழுது DEFINITIONS ஆனது DOWNLOAD ஆகும். படத்தை பார்க்கவும்.

 







 இப்பொழுது உங்கள் கணினியை பற்றிய விபரங்கள் அனைத்தும் உங்களது கணினியின் DEFAULT BROWSER ல் உங்களுக்கு OPEN ஆகும்.   

 




குறிப்பு: இதன் தகவல்கள் அனைத்தும் உங்கள் கணினியின் HARD DISK ல்  HTML கோப்பாக பதியப்படுவதால் இதற்கு இணைய இணைப்பு தேவையில்லை. நீங்கள் UPDATE செய்வதாக இருந்தால் மட்டுமே இணைய இணைப்பு தேவைப்படும்.


இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் வாயிலாக தெரிவியுங்கள் நண்பர்களே. மேலும் சந்தேகங்களுக்கு tamiloduvilaiyadu@gmail.com  என்ற  மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் நண்பர்களே.....


தளத்திற்கு வந்து பதிவினை படித்தமைக்கு மிக்க நன்றி நண்பர்களே.................


No comments :

Post a Comment