Drop down menu

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Monday 30 December 2013

இணைய பயன்பாட்டு அளவை அறிய உதவும் இலவச மென்பொருள்

     


                 இன்றைய நவீன உலகில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நம்மில் பல பேர் தினமும் இணையத்தை பல்வேறு நோக்கத்திற்காக பயன்படுத்துகிறோம். இதில் கம்பி வழி இணையத்தை பயன்படுத்துபவர்கள் மாதம்தோறும், MOBILE MODEM பயன்படுத்துபவர்கள் மாததிட்டம் வழியாகவோ, அல்லது அவர்கள் விரும்பும் திட்டப்படி பணம் செலுத்துகிறார்கள். இதில் பிரச்சினை என்னவென்றால் சிலருக்கு நாம் எந்த அளவிலான இணையத்தை பயன்படுத்துகிறோம் என்பது தெரியாமல் இருப்போம்.


                       உதாரணத்திற்க்கு ஒருவர்  ஒரு மாதத்திற்கு 30 GB அளவிலான இணையத்தை பயன்படுத்தலாம் என்று நினைத்துகொண்டு இருப்பார், ஆனால் மாத கட்டணமோ  40 GB அளவுக்கு வரும். இது அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஏனெனில் அவருக்கு தெரியாமலேயே கணிணியில் பல விதமான மென்பொருள்கள் தானாகவே update செய்து கொள்ளும் வகையில் set செய்யப்பட்டு இருக்கலாம். அதனால் அவை தானாகவே நமக்கு தெரியாமல் இணையத்தை பயன்படுத்தும், எனவே இணைய பயன்பாட்டின் அளவு அதிகமாக இருக்கும்.

                      எனவே நாம் எவ்வளவு இணையத்தை பயன்படுத்துகிறோம் என்பதை தெரிந்துகொள்வது நல்லது. இதற்க்காகவே நமது இணைய பயன்பாட்டு அளவினை கண்காணிக்கும் வகையில், இணையத்தில் பல விதமான இலவச மென்பொருள்கள் இலவசமாகவும், பணம் செலுத்தி வாங்கும் வகையிலும் கிடைக்கின்றன. இவற்றில் ஒரு சிறந்த  இலவச மென்பொருளை பற்றி இந்த பதிவில் பார்போம்.

                             இதன் பெயர் NET GUARD என்பதாகும். இது நமது இணைய பயன்பாட்டு அளவினை கண்காணித்துக்கொண்டே இருக்கும். இதனால் நாம் எவ்வளவு இணையத்தை பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம் என்பதை நாம் அறிந்து கொண்டு அதற்க்கேற்ப நமது மாத திட்டத்தினை அமைத்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் எந்த எந்த PROGRAM கள் எவ்வளவு இணையத்தை பயன்படுத்துகின்றன என்பதையும் அறியலாம்.

NET GUARD மென்பொருளின் சிறப்புகள்:

  • இது கணினி செயல்பட தொடங்கும் பொதே தானாக செயல்பட தொடங்குவதால், நீங்கள் இதை ஒவ்வொரு முறையும் இயக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • இந்த மென்பொருளை நிறுவிய பின் , ஒரு சிறிய Image bar ஒன்று தோன்றும், அதன் மெல் சுட்டியை கொண்டு செல்லும் போது, உங்களுக்கு ஒரு விளக்க Pop up box ஒன்று வரும் இதன் மூலம் விவரங்களை பெற முடியும். எனவே இதை பயன்படுத்துவது எளிது.


  • இந்த Image bar  மீது Double click செய்யும் போது இந்த மென்பொருளின் பயனர் முகப்பு(user interface) கிடைக்கும்.


  • இதன் மூலம் நீங்கள் ஒரு மாததிற்கு உபயோகப்படுத்தும் அளவை விட தாண்டாமல் பார்த்துக்கொள்ளலாம். நீங்கள் Set செய்த அளவை நெருங்கும் போது ஒரு எச்சரிக்கை செய்தி ஒன்று கிடைக்கும்.



  • மாதம் தோறும் ஒரு விளக்க அறிக்கை ஒன்று உங்களுக்கு PDF வடிவில் கிடைக்கும்.


NET GUARD மென்பொருளை இலவசமாக DOWNLOAD செய்ய இதன்மேல் CLICK செய்யவும்.

No comments :

Post a Comment